1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 30 மே 2023 (13:12 IST)

நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியா இது? சின்ன வயசுல எம்புட்டு கியூட்டா இருக்காங்க!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமண செய்துக்கொண்டார்.
 
இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். இப்படியான நிலையில் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பிரபல பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். மறுமணம் செய்தாலும் தன மகன் மீது இருக்கும் பாசம் விஷ்ணு விஷாலுக்கு கொஞ்சமும் குறையவில்லை. 
நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாவது மனைவியா இது?- 37 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க | Actor Vishnu Vishal Second Wife Young Age Photo
 
அவ்வப்போது மகனை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார் . இந்நிலையில் தற்போது மனைவி ஜுவாலா கட்டாவின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.