வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: திங்கள், 29 மே 2023 (17:22 IST)

சமந்தா அணிந்து வந்த செருப்பின் விலை இத்தனை லட்சமா? கேட்டதும் தலையே சுத்துது!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். மாஸ்கோவின் காவிரி திரைப்படத்தில் முதன்முதலாக நடிக்கத் தொடங்கியிருந்தாலும், தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. 
 
இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, தெலுங்கில் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுக் கொண்டார்.
 
அதன் பிறகு தமிழ், தெலுங்கு என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துவந்த சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் கருத்து வேறுபாட்டினால் அவரை விவகாரத்து செய்துவிட்டார். இதனிடையே மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார். 
சமந்தா அணிந்து வந்த செப்பல் விலை இத்தனை லட்சமா? அதிர்ந்த ரசிகர்கள் | Samantha Cheppal Cost Shocks Fans
 
இந்நிலையில் சமந்தா அணிந்துள்ள Louis Vuitton pool slides செருப்பின் விலை சமூகவலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அதாவது. அதன் விலை சுமார் 2.5 லட்சம் ரூபாயை விட அதிகமாம். இந்த தகவல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.