1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 மார்ச் 2021 (17:27 IST)

விஜய் சேதுபதியின் ’’மாமனிதன் ’’பட புதிய அப்டேட்

தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர் கண்ணே கலைமானே, தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
 
இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று.
 
 
இப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.
 
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேரு வதந்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில்  நேற்று விளக்கம் அளித்திருந்தார்.
❤️
@VijaySethuOffl @thisisysr
அதில், மாமனிதன்'தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு,ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி திரு,யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது.
 
தலைப்பு பெற்றதால் முதல் பார்வை,பாடல்விரைவில் Red heart@VijaySethuOffl @thisisysr எனத் தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் இன்று இயக்குநர் சீனு ராமசாமி இன்று இப்படம் குறித்து முக்கிய அப்டேட்  கொடுத்திருக்கிறார்.
 
மாமனிதன் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில், விரைவில் மாமனிதன் படத்தின் முதல் சிங்கில் பாடல் வெளியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 
யுவன் சங்கர் ராஜா மற்றும் அவரது தந்தை இசைஞானி இளையராஜா இணைந்து தயாரித்துள்ள இப்படம் அனைத்து மக்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.