1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 1 மார்ச் 2021 (21:57 IST)

விஜய் சேதுபதி படத்திற்கு ’’இந்தத் தலைப்பு ‘’ உறுதி - இயக்குநர் தகவல்

தமிழ் சினிமாவில் தென் மேற்குப் பருவக் காற்று என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் சீனுராமசாமி. இவர்  கண்ணே கலைமானே,  தர்மதுறை, நீர்ப்பறவை உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
 
இவர் அடுத்து இயக்கியுள்ள படம் மாமனிதன். இப்படத்தில் விஜய் சேதுபதி ஹிரோவாக நடித்திருக்கிறார். இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பர்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்று. 
 
இப்படத்தை இசையமைப்பாளர் மற்றும் யுவன்சங்கர்ராஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கரா ராஜா இசையமைத்திருக்கிறார்.
 
இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு பற்றி பல்வேரு வதந்திகள் வெளியான நிலையில், இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அதில், மாமனிதன்'தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் திரு,ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது அதை முறைப்படி திரு,யுவன்சங்கர்ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார் ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது.
 
தலைப்பு பெற்றதால் முதல் பார்வை,பாடல்விரைவில் Red heart @VijaySethuOffl @thisisysr எனத் தெரிவித்துள்ளார்.