செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 31 மார்ச் 2020 (16:19 IST)

தோழிகளுடன் கூல் போஸ் கொடுத்த நடிகர் விஜய் மகள் - வைரல் புகைப்படம் இதோ!

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு பொறுப்பான கணவராகவும், அப்பாவாகவும் நடந்துகொள்கிறார். அந்தவகையில் வெளிநாட்டில் படிக்கும் அவரது மகள் திவ்யா சாஷா பார்க்க அடிக்கடி ஃபாரின் விசிட் அடிப்பார். அப்போது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.


இந்நிலையில் தற்போது விஜய்யின் மகள் திவ்யா சாஷா  ஒரே மாதிரியான டீ ஷர்ட் அணிந்து தனது தோழிகளுடன் கூலாக அமர்ந்திருக்கும் புகைப்படமொன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மகள் திவ்யா அப்பா நடித்திருந்த "தெறி"’  படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.