1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 14 மார்ச் 2020 (21:33 IST)

மாஸ்டர் பட 3வது பாடல்... ’வாத்தி ரெய்டு’ வெளியீடு...

மாஸ்டர் படத்தின் 3வது பாடல்... வாத்தி ரெய்டு.. இணையதளத்தில் வைரல் ! டுவிட்டரில் டிரெண்டிங் !

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் நிலையில் இந்த இசை வெளியீட்டு விழாவை கோடிக்கணக்கான விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், ’ஒரு குட்டி கத’ பாடல் முதலில் வெளியிடப்பட்டது. அதன்பிறகு ’வாத்தி இஸ் கம்மிங்’ என்ற பாடலும் வெளியானது.
 
இவ்விரண்டு பாடல்களும் குறைந்த நேரத்தில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
 
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை  சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடக்கவுள்ள நிலையில்,தற்போது இப்படத்தின் மூன்றாவது பாடலான ’வாத்தி ரெய்டு’  படக்குழு வெளியிட்டுள்ளது. 
 
இப்பாடலும் இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.