வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 17 மார்ச் 2023 (10:21 IST)

சூப்பர் ஹிட் வெப் சீரிஸ் ‘விலங்கு’-இன் இரண்டாம் சீசன் உருவாகிறதா? விமல் தகவல்!

களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்த விமல், தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வி அடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலை உருவானது. இந்நிலையில் அவர் நடித்துள்ள விலங்கு என்ற வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்தை புரூஸ் லி படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார். இந்த வெப் தொடர் நீண்ட நாட்களுக்குப் பிறகு விமலுக்கு ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது.

அதே போல அந்த சீரிஸின் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜுக்கும் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இப்போது அவரை அல்லு அர்ஜுன் தன்னுடைய நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க அழைப்பு விடுத்துள்ளாராம். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

இதற்கிடையில் விலங்கு சீரிஸின் இரண்டாம் சீசனுக்கான வேலைகள் நடந்து வருவதாக நடிகர் விமல் தகவலைப் பகிர்ந்துள்ளார். தற்போது ம.பொ.சி.  மற்றும் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார் விமல் என்பது குறிப்பிடத்தக்கது.