1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 மே 2022 (09:23 IST)

AK 61 படத்துக்காக ஐதராபாத் சென்ற கண்டெய்னர்… அதற்குள் இருந்தது இதுதானா?

அஜித் 61 படம் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பிற்காக தயார் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்நிலையில் இந்த படத்தில் பயன்படுத்த மிகப்பெரிய அளவில் ரூபாய் நோட்டுகள் தேவைப்படும் என்பதால் தற்போது சென்னையில் இருந்து இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் ஐதராபாத்துக்கு படப்பிடிப்புக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.