வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 6 மார்ச் 2019 (10:13 IST)

என்ன நடக்குது தேமுதிகவில் ?- இன்றாவது முடியுமா கூட்டணி இழுபறி

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் தங்களுக்கான கூட்டணிகளை உறுதி செய்து சீட்களைப் பெற்று வரும் வேளையில் தேமுதிக மட்டும் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல்  இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகள், சமுதாயக் கட்சிகள் மற்றும் தேசியக் கட்சிகள் ஆகியவை எல்லாம் திமுக மற்றும் அதிமுக ஆகிய அணிகளில் இறங்கி தங்களுக்கான சீட்களைப் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் எந்தக் கட்சிகள் எங்கு போட்டியிடும் என்ற விவரம் இரண்டுக் கட்சிகளாலும் வெளியிடப்படவில்லை. ஆனால் தேமுதிக மட்டும் இன்னமும் எந்த முடிவையும் எடுக்காமல் அமைதியாக இருந்து வருகிறது.

தமிழக அரசியல் களம் இப்போது தேமுதிகவை மையமாகக் கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருகிறது. தேமுதிக வின் ஒவ்வொரு நடவ்டிக்கைகளும் தீவிரமாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன. தேமுதிக அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதற்கு முக்கியக் காரணம் தேமுதிக 7+1 சீட்கள். தங்களை விடப் பலம் குறைந்த கட்சியாகவும் குறிப்பிட்ட ஒரு சாதியினரின் வாக்குகளை மட்டுமேக் கையில் வைத்திருக்கும் கட்சியான பாமக வை விட தங்களால் கம்மியான சீட்களை பெற்றுக்கொள்ள முடியாது என பிடித்த பிடியில் நிற்கிறது.

இது சம்மந்தமாக முடிவெடுக்க முடியாமல் அதிமுக வும் தர்மசங்கடத்தில் உள்ளது. அதனால் பேச்சுவார்த்தை இன்னும் இழுபறியில் உள்ளது. கூட்டணி உறுதி செய்யும் விஷயம் தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களில் தொடர்ந்து 3 முறை கூட்டம் நடத்தியுள்ளது. மூன்று கூட்டங்களிலும் 7 சீட்டுக்குக் கம்மியாக கூட்டணியில் பெறுவதில்லை என்பதில் தேமுதிக உறுதியாக இருப்பதாக விஜயகாந்த் கூறியுள்ளார். அப்படி அதற்கு அதிமுக ஒத்துக்கொள்ளாத பட்சத்தில் தேமுதிக வேறு முடிவை எடுக்கும் எனக் கூறியுள்ளார் விஜயகாந்த்.

இதனால் தொண்டர்களும் தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.