திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (17:31 IST)

சூர்யாவின் அரசியல் கருத்துகளால் சூரரைப் போற்று ரிலிஸ் பாதிப்பா?

நடிகர் சூர்யா நீட் தேர்வு குறித்து தனது எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா நேற்று நீட்தேர்வு குறித்தும் நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள் குறித்தும் காரசாரமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை ஆளும் மத்திய மாநில அரசுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சூர்யாவின் அறிக்கையில் நீதிமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார். கொரோனாவுக்கு பயந்து காணொளி மூலம் நீதிமன்ற தீர்ப்புகளை வழங்கி வரும் நீதிமன்றம், மாணவர்களை மட்டும் அச்சமின்றி தேர்வு எழுத உத்தரவிடுகிறது என்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சூர்யாவுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஆனால் இது தமிழக அரசியலிலும் சில பரபரப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் அதிமுக மற்றும் அந்த கூட்டணியில் உள்ள பாஜக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் சூர்யா மேல் கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் சூரரைப் போற்று திரைப்படத்துக்கு ஏதேனும் சிக்கல் வரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

ஆனால் தியேட்டர் அதிபர்களை மிரட்டுவது போல அமேசான் ப்ரைம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்ட முடியாது எனவும் சொல்லப்படுகிறது. எப்படி பார்த்தாலும் சூர்யாவுக்கு ரசிகர்கள் மத்தியிலும் தமிழக மக்கள் மத்தியிலும் ஏகோபித்த ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.