1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (07:55 IST)

வடிவேலு, விவேக் உடன் நடித்த காமெடி நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.

sivanaraya
வடிவேலு, விவேக் உடன் நடித்த காமெடி நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்.
வடிவேலு விவேக் உள்பட பல காமெடி நடிகர்களுடன் இணைந்து நடித்த காமெடி நடிகர் சிவ நாராயணமூர்த்தி என்பவர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு திரையுலகினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இயக்குனரும் நடிகருமான விசுவால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் சிவ நாராயணமூர்த்தி. இவர் அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து உள்ளார் என்பதும் குறிப்பாக விவேக் மற்றும் வடிவேலு படங்களில் உள்ள காமெடி காட்சிகளில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
67 வயதான நாராயணமூர்த்தி கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு எட்டு முப்பது மணிக்கு காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிவ நாராயணமூர்த்தி மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva