வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (18:37 IST)

பொது இடத்தில் சால்வை அணிவித்தது அவரது தவறு: நடிகர் சிவக்குமார்

sivakumar
நடிகர் சிவகுமார் நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் அவருக்கு முதியவர் ஒருவர் சால்வை அணிய வந்தார். நடிகர் சிவகுமார் அந்த சால்வையை பிடுங்கி தூக்கி எறிந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. 
 
ஏற்கனவே நடிகர் சிவகுமார் ஒரு இளைஞரின் செல்ஃபோனை தூக்கி எறிந்து அதன் பின் அவர் வருத்தம் தெரிவித்ததோடு அந்த இளைஞருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்தார். 
 
இந்த நிலையில் நேற்று ஒரு முதியவரின் வயதுக்கு கூட மதிப்பு தராமல் அவர் அணிய வந்த சால்வையை பிடுங்கி தூக்கி எறிந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து நடிகர் சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
 
காரைக்குடி நிகழ்ச்சியில் சால்வையை தூக்கியெறிந்த நிகழ்வுக்கு வருத்தம்  தெரிவித்து கொள்கிறேன். ஆனால் அதே நேரத்தில் எனக்கு பிடிக்காது என தெரிந்ததும் பொது இடத்தில் சால்வை அணிவித்தது அவரது  தவறு தான். மேலும் 
பொது இடத்தில் சால்வை வாங்கி தூக்கியெறிந்தது எனது தவறு; அதற்கு Sorry கேட்டு கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
 
Edited by Siva