சனி, 14 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (19:04 IST)

நடிகர் சத்யராஜ் நடிக்கும்'மை பெர்ஃபெக்ட் ஹஸ்பண்ட்'சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

மிக வித்தியாசமான முறையில், மூன்று ஹீரோயின்களுடன் சத்யராஜ்  இடம்பெற்றிருக்கும் 'மை பெர்ஃபெக்ட்  ஹஸ்பண்ட்' டிஸ்னி+ஹாட் ஸ்டார் வெப்சீரிஸின்  ஃபர்ஸ்ட் லுக்,  ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் பெற்று வருகிறது. 
 
அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய, பொழுதுபோக்கு படைப்பாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. 
 
தயாரிப்பாளர் முகமது ரசித் தயாரித்துள்ள இந்த சீரிஸினை,  இயக்குநர் தாமிரா இயக்கியுள்ளார். இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸிற்கு பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார் மற்றும் எடிட்டிங் பணிகளைப் பார்த்தசாரதி செய்துள்ளார். 
 
இந்த சீரிஸில் சத்யராஜுடன் நடிகைகள் சீதா, ரேகா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
 
இந்த சீரிஸில்,  நடிகர்கள் வர்ஷா பொல்லம்மா,ரக்ஷன், லிவிங்ஸ்டன்,அஜீத் காலிக்,கிருத்திகா மனோகர்,ராகவி மற்றும் ரேஷ்மா பசுபால்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
 
இந்த வெப் சீரிஸுக்கு மெல்லிசை மன்னர் வித்யாசாகர் இசையமைத்துள்ளார்