1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2020 (07:59 IST)

ரொம்ப நன்றி கேதார், நல்லா வருவிங்க: தமிழ் காமெடி நடிகர் கிண்டல்!

ரொம்ப நன்றி கேதார், நல்லா வருவிங்க:
நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு முழுக்க முழுக்க கேதார் ஜாதவ்வின் சொதப்பலான ஆட்டமே காரணம் என நெட்டிசன்கள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர் 
 
சென்னை அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இது குறித்து தங்களது டுவிட்டர் பக்கங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கேதார் ஜாதவ்வை அவர்கள் கிண்டலடித்து விமர்சனம் செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான சதீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’ரொம்ப நன்றி ஜாதவ், நல்லா வருவீங்க’ என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் காமெடியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்
 
அடுத்த போட்டியிலும் ஜாதவ் உண்டு என்றும், கொல்கத்தா அணிக்கு வெற்றி தேடித் தந்த ஜாதவ்வுக்கு வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்து வருகின்றனர். கொல்கத்தா அணி வெற்றி பெற்றாலும் ஆட்டநாயகன் விருதை ஜாதவ்வுக்கு தான் கொடுத்திருக்க வேண்டும் என்றும் நடுவர்கள் தவறு செய்துவிட்டனர் என்றும் கேலி கிண்டலுடன் கூடிய கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன