செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : புதன், 17 பிப்ரவரி 2021 (17:53 IST)

நூறாண்டுகள் வாழ்க தம்பி... வெல்வோம்...சிவகார்த்திகேயனை வாழ்த்திய பிரபல நடிகர்

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர் சமுத்திரகனி வாழ்த்துக் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளம்நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தனியார் தொலைக்காட்சியில்  நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் தனது தனித்திறமையின் மூலம் இன்று வெற்றி பெற்ற நடிகராக வலம் வருபவர்.

இவர் இன்று தனது 36 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இவரது தென்னிந்திய சினிமா பிரபலங்கள்  மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு நடிகர் சமுத்திரகனி தனது  டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார்.

அதில், நூறாண்டுகள் வாழ்க தம்பி... வெல்வோம்... எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படத்தில்  வில்லனாக சமுத்திரகனி நடித்திருந்தது குறிப்பிடத்தகக்து.

மேலும் சிவகார்த்தியேன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் படத்தில் ,ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள வேற வெலர் சகோ பாடல் இன்று இரவு 7 மணிக்கு ரிலீசாகும் எனத் தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.