செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 16 பிப்ரவரி 2021 (12:38 IST)

வேற லெவல் சகோ!! நாளை வெளியாகும் அயலான் ஃபஸ்ட் சிங்கிள்!

நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பத்தில் முதல் பாடல் வெளியாக உள்ளது. 

 
சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் செய்திகள் வெளியாகின. 
 
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் இந்த ஆண்டு இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்பத்தில் முதல் பாடல் வெளியாக உள்ளது. 
ஆம், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வேற லெவல் சகோ என்ற பாடல் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.