1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 22 ஜனவரி 2023 (08:56 IST)

ரஜினியின் லால் சலாம் படத்தில் இருந்து வெளியேறிய முக்கிய கலைஞர்…!

லால் சலாம் படத்துக்கு ஆடை வடிவமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவர் தேசிய விருது பெற்ற பூர்ணிமா ராமசாமி

ஐஸ்வர்யா இயக்கும் புதிய படமான லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் ஒரு கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இதுபற்றி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகன்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடிக்கின்றனர். ரஜினிகாந்த் கடைசியாக குசேலன் மற்றும் ரா ஒன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்த பூர்ணிமா ராமசாமி கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பெயரை படத்தின் போஸ்டரில் இருந்து நீக்குவதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுவதாகவும் கூறியுள்ளார்.