திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 3 ஏப்ரல் 2023 (09:46 IST)

இன்னும் பழைய டெம்ப்ளேட்டையே பயன்படுத்துகிறார்கள்… தென்னிந்திய சினிமாக்களை விமர்சனம் செய்த நடிகர்!

பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர் ராகுல் தேவ். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இவருக்கு பெரும்பாலும் கொடூரமான வில்லன் வேடங்களே கொடுக்கப்பட்டுள்ளன. இவர் தமிழில் நடித்த நரசிம்மா, ஆதவன், வேதாளம் மற்றும் லெஜண்ட் என அனைத்து படங்களிலும் வில்லன்தான்.

இந்நிலையில்தான் அவர் தென்னிந்தியா சினிமாக்களின் கதை சொல்லும் பாணி குறித்த தன்னுடைய விமர்சனத்தை வைத்துள்ளார். அதில் “தென்னிந்திய சினிமாவில் 70கள் மற்றும் 80களின் டெம்ப்ளேட்டையே படமாக எடுக்கிறார்கள். நிஜ வாழ்க்கைக்கு சம்மந்தமே இல்லாத ஆக்‌ஷன் காட்சிகளையே அவர்கள் காட்டுகிறார்கள்.ஒரே மாதிரியான கதையை பார்வையாளர்கள் ரசிக்கும் விதமாக சொல்வதால் அது வெற்றி அடைகிறது. நான் நடிக்கும் சில படங்களில் எனது புத்திசாலித்தனம் மற்றும் மூளையை வீட்டிலேயே வைத்துவிட்டுதான் சென்று நடிக்க வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.