மாணவனின் கல்வி கட்டணம் செலுத்தும் நடிகர் ராகவா லாரன்ஸ் ...

rahava lawarance
sinoj kiyan| Last Updated: வெள்ளி, 20 டிசம்பர் 2019 (16:45 IST)
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், சமூக ஆர்வலர், நடன இயக்குநர் என பன்முகங்களை கொண்டவர் ராகவா லாரன்ஸ். இவர்,மணிகண்டன் என்ற மாணவனின் கல்விக் கட்டணம் செலுத்த ஒப்புக் கொண்டுள்ளார். 
இன்று, காலையில் மணிகண்டன் என்ற மாணவர் தனது  டுவிட்டர் பக்கத்தில், அண்ணா நான், மூன்று வருட டிப்ளமோ படிப்பில் இரண்டி வருடத்துக்குரிய கட்டணத்தைக் கட்டிவிட்டேன். ஆனால் இன்னும் ஒரு வருடத்துக்கான கட்டணம் நிலுவை உள்ளது . எனக்கு உதவுங்கள் அண்ணா என்று   ஒரு பதிவிட்டு அதை நடிகர் ராகவா லாரன்சுக்கு டேக் செய்திருந்தார்.
 
அதைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ், நான் உங்கள் கல்விக் கட்டணத்தை கல்லூரியில் செலுத்தி விடுகிறேன். நன்றாக படியுங்கள். வாழ்த்துகள். ஒரு சின்ன வேண்டுகோள், நீங்கள்  படிப்பு முடித்ததும் , உங்கள் வாழ்க்கையில் படிப்பதற்க்காகப்  போராடும் மக்களுக்கு உதவுங்கள் என மாணவனுக்கு பதில் அளித்துள்ளார். 
 
இதுகுறித்து ராகவா லாரன்சிற்கு  பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :