1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 30 மே 2017 (19:48 IST)

சர்ச்சையை ஏற்படுத்திய பிரியங்கா சோப்ரா - மோடி சந்திப்பு

வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 

 


நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதித்துவிட்டு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மோடி மீது ஏற்கனவே நாட்டு மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் ஜெர்மனியில் நடிகை பிரியங்கா சோப்ராவை சந்தித்து பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
பிரியங்கா சோப்ரா, மோடியுடன் சந்தித்து பேசிய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அரசு வேலையாக சென்ற மோடிக்கு நடிகையை சந்தித்து பேச நேரமுள்ளது. சொந்த நாட்டில் இருக்கும்போது போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேச நேரமில்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.