நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மாயம்! மனைவி போலீசில் புகார்

VM| Last Modified வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:58 IST)
'பவர்ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமாகிவிட்டதாக   அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். மருத்துவரான இவர் ஒரு சில படங்களை தயாரித்து நடித்துள்ளார். தற்போது நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். முழு நேர காமெடி நடிகராக சீனிவாசன் மாறிவிட்டார்.
 
இந்நிலையில் நண்பரை பார்க்க செல்வதாக கூறிய பவர்ஸ்டார் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.  பல இடங்களில் தேடியும் தனது கணவரை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவரது  மனைவி ஜூலி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 
 
சீனிவாசன் மீது நிறைய மோசடி புகார்கள் உள்ளன.அதில் சம்பந்தப்பட்ட யாரேனும் சீனிவாசனை கடத்திவிட்டார்களா அல்லது அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.


இதில் மேலும் படிக்கவும் :