செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 செப்டம்பர் 2017 (21:34 IST)

பழம்பெரும் நடிகர் பீலி சிவம் திடீர் மரணம்...

சில காலமான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பழம்பெரும் நடிகர் பீலி சிவம் சற்றுமுன் காலமானார்.


 
 
’தூரத்து இடி முழக்கம்' என்ற படம் மூலம் அறிமுகமானவர் பீலி சிவம். பல படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்துள்ளார்.
 
இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பீலி சிவம் வேலூர் சிஎம்சியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானார்.
 
இவர் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருதை பெற்றவர். ‘அழகன்’, ‘கங்காகவுரி, ‘விருதகிரி’, ‘தங்க பாப்பா’, ‘அபிமன்யு’ உள்ளிட்டவை இவர் நடித்த சில படங்களாகும்.
 
இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.