1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (12:34 IST)

பேட்டிகள் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் அமைச்சர்கள்?

நாங்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் நலமாக இருக்கிறார் என கூறியதெல்லாம் பொய் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியது ஜெயலலிதா மரணத்திறகு அவர்களும் துணை நின்றதை உறுதிபடுத்தியுள்ளது.


 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த நாட்களில் அவரது சிகிச்சை குறித்த தகவல்கள் மர்மமாகவே இருக்கிறது. அதிமுக நிர்வாகிகள், ஆளுநர் உள்பட பலரும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்றே கூறி வந்தனர்.
 
இதுவே ஜெயலலிதா குறித்து தமிழக மக்களுக்கு கிடைத்த தகவல்களாக இருந்தது. ஒருபக்கம் ஊடகங்களில் ஜெயலலிதா மரணத்திறகு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என செய்திகள் பரவியது. ஜெயலலிதா மறைவுக்கு பின் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயலலிதா மரணத்திற்கு காரணம் சசிகலாதான் என குற்றம்சாட்டினார்.
 
தற்போது சசிகலா அணியில் இருந்த எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்ததை அடுத்து சசிகலா குடும்பத்தினர் அதிமுக கட்சியில் இருந்து ஓதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். 
 
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மதுரையில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் ஜெயலலிதா மருத்துவமனையில் நலமாக உள்ளார் என நாங்கள் கூறியதெல்லாம் பொய் என்று கூறினார்.
 
அவர் கூறியது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை ஏன் அவர்கள் அப்போதே கூறவில்லை என கேள்வி எழுவதால் அதிமுக நிர்வாகிகளும் ஜெயலலிதா 
 
மரணத்திற்கு துணை நின்றதை சுட்டி காட்டுகிறது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என்று கூட தெரியாமல் இருந்தவர்கள், தற்போது அதை 
 
பற்றி பேசுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதை வைத்து பார்த்தால் அதிமுகவினர் அனைவரும் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் விதமாகவே உள்ளது என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.