திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 1 செப்டம்பர் 2021 (08:16 IST)

தமிழக முதல்வருக்கு நடிகர் பவன்கல்யாண் வாழ்த்து!

தமிழக முதல்வராக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதும் அதேபோல் பொதுமக்களுக்கு சாதகமாக பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
பெண்களுக்கு இலவச பேருந்து உள்பட பல திட்டங்களை அவர் கொண்டு வந்ததை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் முதல்வருக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் 
 
எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக்கூடாது. அதை செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள் 
 
உங்களது ஆட்சி நிர்வாகம் உங்கள் ஆட்சியின் செயல்பாடுகள் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் உள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் பவன் கல்யாண் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்