வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 30 ஆகஸ்ட் 2021 (16:49 IST)

உங்களால் தேசம் பெருமை கொள்கிறது: பதக்கம் வென்றவர்களுக்கு கமல் வாழ்த்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இன்று ஒரே நாளில் இந்தியாவுக்கு நான்கு பதக்கங்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதில் வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வினோத் குமார் என்பவரின் பதக்கம் திரும்ப பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பிரதமர் மோடி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திரையுலக பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் பாராட்டி வருகின்றனர் 
 
இந்த நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதக்கம் வென்றவர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸ்  போட்டியில் பதக்க வேட்டையை சாத்தியப்படுத்திய அவனி லெகரா, பவினா பென் படேல், சுந்தர்சிங் குர்ஜார், வினோத் குமார், நிஷாத் குமார், தேவேந்திர ஜஜாரியா மற்றும் யோகேஷ் கத்துனியா  ஆகியோருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  உங்களால் தேசம் பெருமை கொள்கிறது.