1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 28 மே 2017 (21:28 IST)

ரஜினிக்கு ஆண்டவனுடன் தொடர்பு இருக்குது, ஆனால் எனக்கு இல்லையே! பார்த்திபன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அவரது அரசியல் வருகை குறித்து கருத்து கூறாத பிரபலங்களே இல்லை என்று கூறலாம். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர், இயக்குனர் பார்த்திபன், 'ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு அவரது பாணியில் நகைச்சுவையுடன் பதில் கூறினார்



 


அவர் கூறியதாவது: "ரஜினி ஆண்டவன் உத்தரவிட்டால் அரசியலுக்கு வருவேன் என்கிறார். அவருக்கு உத்தரவு போடும் ஆண்டவனுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை. அதனால், அவர் அரசியலுக்கு வருவது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது." என்றார்.

“ரஜினி ஆண்டவனிடம் தொடர்பு வைத்துள்ளார். ஆண்டவனுடன் எனக்கு நேரடி தொடர்பு இருந்தால், நானே இது பற்றி அவரிடம் கேட்டுவிடுவேன். அவர் ஆண்டவனிடம் பேசி முடிவு செல்லும் வரை பொறுமையாக காத்திருப்போம்.” என்றும் அவர் கூறினார்.

ரஜினி குறித்து இந்த கருத்தை பார்த்திபன் ரஜினியை கிண்டல் செய்யும் வகையில் கூறினாரா? அலல்து தனது பாணியில் நகைச்சுவை தன்மையுடன் கூறினாரா? என்பது குறித்து புரியாமல் ரஜினி ரசிகர்கள் திணறி வருகின்றனர்