செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (09:13 IST)

இரவின் நிழல் மேக்கிங் வீடியோ… இயக்குனர் பார்த்திபன் வெளியிட்ட அப்டேட்!

வித்தியாச இயக்குனர் பார்த்திபன் சமீபத்தில் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்து வெளியிட்டார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் சில மாதங்களுக்கு திரையரங்குகளில் வெளியானது.

இதையடுத்து தற்போது இந்த படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒரே ஷாட்டில் படம் எடுக்கப்பட்டது எப்படி என்பது குறித்த மேக்கிங் வீடியோவை பார்த்திபன் தன்னுடைய யுட்யூப் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுபற்றி அவரின் பதிவில் “வணக்கம் நண்பர்களே! இரவின் நிழல் படத்தின் making/documentary என் Radhakrishnan parthiban YouTube channel மூலமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறேன். புதிய channel என்பதால் பிரபலங்கள் மூலமாக பிரமாதமாக விளம்பரபடுத்தி வெளியிடலாம் என அறிவார்ந்தோர் கூறியதால் …. தோ… உங்கள் முன் அக்கோரிக்கையை வைக்கிறேன்.

முகவரியற்றிருந்த என்னை, வற்றியிருந்த என்னை பிரபலபடுத்தியதும் பலப்படுத்தியதும் நீங்கள் தானே! Content தான் ஈர்க்கவல்லது என்பதாலும், இரவின் நிழல் making உங்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாயிருப்பது என்பதாலும் தைரியமாக இம்முடிவிற்கு வந்திருக்கிறேன். பார்த்த சிலர் பார்க்கும்படி பலரிடம் கூற கூற,ஒரு சாதனை அரங்கேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நாளையே கூட இது நடைபெறும் உங்களின் ஆதரவோடு…நன்றியுடன், இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்க கூறியுள்ளார்.