மீண்டும் ஓரம்கட்டப்பட்ட சஞ்சய் மஞ்சரேக்கர் – ஐபில் தொடரில் வாய்ப்பு இல்லை!
பிசிசிஐ ஐபிஎல் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள வர்ணனையாளர்கள் பட்டியலில் சஞ்சய் மஞ்சரேக்கர் இல்லை என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பிசிசிஐ வர்ணனையாளர்கள் குழுவில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் அவரை திடீரென பிசிசிஐ அந்த குழுவில் இருந்து நீக்கியது. இதற்குக் காரணம் அவர் இந்திய அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்தர ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என விமர்சனம் செய்ததே. அதன் பிறகு அவருக்கு மன்னிப்பு வழங்கி மீண்டும் சேர்த்துக் கொண்டது.
ஆனால் இப்போது ஐபிஎல் தொடரில் வர்ணனையாளர் குழுவில் அவர் பெயர் இடம்பெறவில்லை. இது சம்மந்தமாக வெளியான பட்டியலில் கவாஸ்கர், சிவராம கிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப்தாஸ் குப்தா, ரோஹன் கவாஸ்கர், ஹர்ஷா போக்ளே, அஞ்சும் சோப்ரா ஆகியோர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இதனால் மீண்டும் சஞ்சய் மஞ்சரேக்கரை பிசிசிஐ ஒதுக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.