புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 6 நவம்பர் 2024 (16:45 IST)

பாலியல் புகார் பொய்: எஃப்ஐஆரில் இருந்து நடிகர் நிவின் பாலி பெயர் நீக்கம்..!

நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து, எஃப்.ஐ.ஆர்-இல் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக நடிகர் நிவின் பாலி மீது புகார் அளித்திருந்தார். இந்த புகாரை அடுத்து நிவின்பாலி உள்பட ஆறு பேர் மீது ஜாமினில் வெளி வராத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், இளம்பெண் புகார் அளித்த தேதியில் நிவின் பாலி எர்ணாகுளத்தில் இல்லை என்றும், நிவின் பாலி மீது குற்றச்சாட்டில் போதிய ஆதாரங்கள் இல்லை என்றும் நிரூபிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவரது பெயர் எஃப்.ஐ.ஆர்-இல் இருந்து நீக்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நிவின் பாலி வெளிநாட்டில் இருந்ததற்கான பயண சீட்டு விவரங்கள் மற்றும் அவரது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் ஆகியவை அவர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யவில்லை என்றும், அவரது பெயர் நீக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.


Edited by Mahendran