ரஜினியுடன் நெப்போலியன் சந்திப்பு: கட்சியில் இணைகிறாரா?

Last Modified செவ்வாய், 9 ஜூலை 2019 (21:51 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர் வரும் 2021ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு ஒருசில மாதங்களுக்கு முன் தான் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
இருப்பினும் அரசியல் கட்சியை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அவர் தயார் செய்து வைத்திருப்பதால் எந்த நேரம் தேர்தல் வந்தாலும் அப்போது ரஜினி கட்சி ஆரம்பிக்க தயக்கம் காட்ட மாட்டார் என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் அவ்வபோது ரஜினியை அரசியல் பிரபலங்கள் சந்தித்து வரும் நிலையில் இன்று அவருடைய போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினியுடன் 'எஜமான்' உள்ளிட்ட படங்களில் நடித்தவரும் முன்னாள் திமுக எம்பியுமான நெப்போலியன் சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருதரப்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் என்ன பேசினார்கள், என்ன கருத்துகள் பரிமாறப்பட்டது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. ரஜினி கட்சி ஆரம்பிக்கும்போது அவரது கட்சியில் நெப்போலியன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :