தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பம்!

vaccine
தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி: இன்று முதல் ஆரம்பம்!
siva| Last Updated: புதன், 28 ஜூலை 2021 (07:56 IST)
இதுவரை அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை இன்று காலை 10 மணிக்கு ஆரம்பித்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது தெரிந்ததே. அதன்படி இந்த திட்டம் இன்று முதல் தனியார் மருத்துவமனைகளிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது
மேலும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி தடுப்பூசி போடும் முறையும் எப்பொழுதும் போது தொடரும் என்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு தடுப்பூசி ரூபாய் 750 எனவும் கோவாக்சின் தடுப்பூசி ரூபாய் 1410 எனவும் செலுத்தி விரும்புபவர்கள் போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் மேலும் படிக்கவும் :