திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 10 டிசம்பர் 2022 (16:21 IST)

நெகட்டிவ் விமர்சனங்களை பெறும் ஜீவாவின் வரலாறு முக்கியம்!

ஜீவா நடித்த வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆகியுள்ளது.

படம் டிசம்பர்  9ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தபடி ரிலீஸ் ஆனது. நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மற்றும் பாபா ரிலீஸ் என பரபரப்பாக செல்ல, இந்த படத்தை யாருமே கண்டுகொள்ளவில்லை.

அப்படியே தப்பி தவறி சென்றவர்களும், படம் சுத்தமாக பிடிக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஜீவா கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்து  வரும் நிலையில் இந்த படமும் தோல்வியாக அமைய அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.