1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (16:06 IST)

தயாரிப்பாளராக களமிறங்கும் ஜீவா… இளம் இயக்குனர்களுக்கு வலைவீச்சு!

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் எல்லாம் சூப்பர்ஸ்டார் தயாரிப்பாளராக விளங்கியவர் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர் பி சௌத்ரி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சினிமா தயாரிப்பதை விடுத்து சினிமாக்களுக்கு பைனான்ஸ் மட்டுமே செய்துவந்தார். அவர்களது இரு மகன்களான ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் சினிமாவில் நடிகர்களாக வலம் வந்தனர்.

இதில் ஜீவா நிறைய ஹிட் படங்கள் கொடுத்தாலும், இப்போது மார்க்கெட் இல்லாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தானே தயாரிப்பாளராக களமிறங்க முடிவு செய்துள்ளார். தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘சூப்பர் பாக்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் திறமையான இளம் இயக்குனர்களின் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அவர் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.