1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 16 ஜூன் 2017 (19:02 IST)

அஞ்சலியிடம் காதலை வாரி இறைத்த ஜெய் - டிவிட்டரில் காதல் மயம்

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறுவதோடு, கூடவே தனது காதலையும் கொட்டியிருக்கிறார்.


 

 
நடிகர் ஜெய் மற்றும் நடிகை அஞ்சலி இருவரும் காதலிப்பதாக தமிழ் சினிமா வட்டாரங்கள் பேசிக்கொண்டாலும், இந்த செய்தியை இருவரும் கண்டுகொள்ளவில்லை. மேலும், இரண்டு பேரும் இதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. இதனால், இந்த காதல் செய்தி இன்னமும் வதந்தியாகவே சுற்றி திரிகிறது.
 
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்கு பின்னர் இருவரும் பலூன் படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் இவர்களின் நெருக்கம் மேலும் அதிகமாகியுள்ளதாக கோலிவுட்டில் பேசப்பட்டது.
 
இந்நிலையில், இன்று ஜூன் 16ம் தேதி அஞ்சலிக்கு பிறந்த நாள் இதற்கு டிவிட்டரில் வாழ்த்து கூறிய ஜெய் “நீ எனக்கு எவ்வளவு சிறப்போது அதுபோல் இந்த நாளும் உனக்கு அமையட்டும். என்னுடைய ஒவ்வொரு நாளையும் நீ சிறப்பாக்குகிறாய். நானும், கடவுளும் எப்போதும் உன்னுடன் இருப்போம்” என வாழ்த்தியுள்ளார்.
 
இதற்கு பதிலளித்துள்ள அஞ்சலி “என்னோடு நீ இருப்பதற்கு நன்றி. அது தொடர வேண்டும். இந்த நாளில் இப்படியொரு சிறப்பான வாழ்த்து கூறியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.
 
இதைக் கண்ட நெட்டிசன்கள் இருவரும் காதலிப்பது உறுதி. அதனால்தான் இப்படி ஒரே கொஞ்சல்ஸ் என கிண்டலடித்து வருகின்றனர்.