வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 5 ஜூலை 2023 (19:56 IST)

நடிகர் தனுஷின் 50வது படத்தின் பூஜை...வைரலாகும் புகைப்படம்

dhanush 50
நடிகர் தனுஷின் 50வது படத்தின் பூஜை இன்று  நடைபெற்றதாக தகவல் வெளியாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ். இவர் வாத்தி படத்திற்குப் பின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை அடுத்து, அவர் தனுஷ் 50வது படத்தில் நடிக்கவுள்ளார்.

இவர் ஏற்கனவே  ராஜ்கிரண் நடிப்பில் பவர் பாண்டி படத்தை இயக்கிய  தனுஷ், அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே  இயக்கி நடிக்கவுள்ளார்.  

இவருடன் இணைந்து விஷ்ணு விஷால், சந்தீப் கிஷோர், காளிதாஸ், ஜெயராம், துசாரா விஜயன் நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளது.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு ஏ. ஆர. ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டர் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

இது வைரலாகி வருகிறது.