திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 13 ஜூலை 2023 (20:28 IST)

தனது குருவை இயக்கி வரும் நடிகர் தனுஷ்! ரசிகர்கள் பாராட்டு

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ள தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி நடித்து வரும் நிலையில், தன் குருவையும் இயக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ், இவர், தனுஷ்50 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபல நடிகர், நடிகைகள்  நடிக்கவுள்ள நிலையில்,  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், திரிஷா, துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கேப்டன் மில்லர் படம் முடிந்துள்ளதை அடுத்து இந்த படத்தை தனுஷ் உடனடியாக தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கிய நிலையில், சென்னையில் இப்பட ஷீட்டிங் நடைபெற்று வருவது. இதில், முக்கிய வேடத்தில் நடித்து வரும்  காட்சிகளை தனுஷ் இயக்கி வருகிறார்.

இது கேங்ஸ்டர் சம்பந்தமான கதை என்று கூறப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஹீரோவாக தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தை செல்வராகவன் இயக்கிய நிலையில் தற்போது தன் குருவை தனுஷ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் தனுஷை பாராட்டி வருகின்றனர்.