பூஜையுடன் தொடங்கிய தனுஷின் அடுத்த தெலுங்கு படம்!
நடிகர் தனுஷ் நடித்த முதல் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக இருக்கும் நிலையில் அவர் தற்போது அருண் மாதேஸ்வரன் நடிப்பில் உருவாகிவரும் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனுஷ் ஏற்கனவே ஒப்பந்தமான தெலுங்கு படத்தில் இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் பூஜை தற்போது ஐதராபாத்தில் நடந்துள்ளது.
ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இந்த படம் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளது. உணர்வு பூர்வமான காதல் கதையாக இந்த படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.