செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (10:01 IST)

நடிகரும் எழுத்தாளருமான பாரதி மணி மறைவு!

எழுத்தாளரும் நடிகருமான பாரதி மணி நேற்று இயற்கை எய்தியுள்ளார்.

பாபா, பாரதி மற்றும் புதுப்பேட்டை ஆகிய படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாரதி மணி. அதற்கு முன்பாகவே அவர் டெல்லியில் பல மேடை நாடகங்களில் நடித்து புகழ் பெற்றவர். இது மட்டுமில்லாமல் இவர் எழுதிய பல நேரங்களில் பல மனிதர்கள் எனும் புத்தகம் இலக்கிய வாசகர்கள் இடையே புகழ் பெற்றது.

இந்நிலையில் 84 வயதான பாரதிமணி உடல்நலக்குறைவு மற்றும் முதுமை காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.