ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (08:55 IST)

பிரபல காமெடி நடிகருக்கு கால்விரல் அகற்றம்.. சர்க்கரை நோயால் விபரீதம்..!

பிரபல தமிழ் காமெடி நடிகருக்கு சர்க்கரை நோய் காரணமாக கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழ் திரை உலகின் காமெடி நடிகர்களில் ஒருவர் பாவா லட்சுமணன். இவர் வடிவேலுவுடன் பல படங்களில் இணைந்து நடித்து உள்ளார் என்பதும் இவரது காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் ரசிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் நடிகர் பாவா லட்சுமணன் கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய கால் கட்டைவிரல் அகற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva