1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : சனி, 9 மார்ச் 2024 (10:07 IST)

சிங்கம் குள்ளநரிகள தொரத்துனா அதுக்கு பேர் போர் இல்ல… வேட்ட- அடுத்த ஆக்‌ஷன் அவதாரத்துக்கு தயாரான பாலகிருஷ்ணா!

தென்னிந்திய சினிமாவில் தனது நம்ப முடியாத மிகை எதார்த்த ஆக்‌ஷன் படங்களின் மூலமாக ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் படங்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டாலும் வசூலில் பட்டையைக் கிளப்புகின்றன.

சமீபத்தில் ரிலீஸான இவரின் வால்டர் வீரய்யா மற்றும் பகவந்த் கேசரி போன்ற படங்கள் 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்தன. இதையடுத்து இப்போது பாலகிருஷ்ணாவின் அடுத்த படத்தை வால்டர் வீரய்யா படத்தை இயக்கிய பாபு கொல்லி இயக்கி வருகிறார்.

பாலகிருஷ்ணா 109 என அழைக்கப்பட்டு வரும் இந்த பட அறிவிப்பை பாலகிருஷ்ணாவின் அக்மார்க் மாஸ் ஆக்‌ஷன் காட்சியோடு வெளியிட்டுள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.