புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2024 (10:13 IST)

இயக்குனர் சிவாவின் தம்பி ‘சர்ச்சை நாயகன்’ பாலா மூன்றாவது திருமணம்…!

தமிழில் அன்பு படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் பாலா. இவரின் அண்ணன்தான் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான சிறுத்தை சிவா. மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பாலா அம்ருதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவரும் பிரிந்தனர்.

அதன் பின்னர் அவர் எலிசபெத் என்ற மருத்துவரோடு திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த உறவும் சமீபத்தில் பிரிந்தது. இந்நிலையில் நடிகர் பாலா தற்போது திடீரென தன்னுடைய உறவினர் பெண் ஒருவரை எர்ணாகுளத்தில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமணத்தில் பாலாவின் அண்ணன் சிறுத்தை சிவா கூட கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது திருமணம் குறித்து பேசியுள்ள பாலா “சமீபத்தில் எனக்கு கல்லீரல் அறுவைசிகிச்சை நடந்தது. இப்போது அதிகளவில் மருந்துகள் எடுத்துக்கொண்டு நலமாக இருக்கிறேன். அதனால் எனக்கு ஒரு துணை வேண்டும் என்பதற்காக நான் திருமணம் செய்துகொண்டுள்ளேன்” எனப் பதிலளித்துள்ளார். சமீபத்தில் பாலா தன்னையும் தன் மகளையும் பின் தொடர்ந்து தொல்லை தருவதாக அவரின் முன்னாள் மனைவி அம்ருதா புகாரளிக்க, பாலா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.