1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2023 (15:29 IST)

சூர்யா 42 பட அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் தனஞ்செயன்!

சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்க, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் தயாரித்து வருகிறார்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப் படவில்லை.இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் கோவாவில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்துகு ‘வீர்’ என்று தலைப்பு வைக்க இயக்குனர் சிவா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் 10 மொழிகளில் வெளியாவதால் எல்லா மொழிக்கும் பொறுத்தமான தலைப்பாக இருக்க இந்த தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் நிகழ்காலம் மற்றும் வரலாற்று காலம் என இரண்டு காலகட்டங்களில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் தனஞ்செயன் “படத்தின் நிகழ்கால காட்சிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது” எனக் கூறியுள்ளார்.