திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 15 செப்டம்பர் 2016 (10:33 IST)

நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் - சரத்குமார் அறிக்கை

நடிகர் சங்கத்திலிருந்து தற்காலிக நீக்கம் - சரத்குமார் அறிக்கை

நடிகர் சங்கத்திலிருந்து முன்னாள் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர் மூவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 
"இடை நீக்கம் தொடர்பான அதிகாரபூர்வ தகவல், கடிதம் இதுவரை எனக்கு கிடைக்கப் பெறவில்லை. முன்னாள் பொதுச் செயலாளர், முன்னாள் பொருளாளர் ஆகிய இருவருக்கும் கூட கடிதம் வரவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்து என்னை தற்காலிகமாக நீக்கியது குறித்த தகவல் ஊடகங்களில் அறிவித்துள்ளனர். 
 
நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதாக அதிகாரபூர்வமான கடிதம் வரவில்லை. அப்படி கடிதம் வந்தால் எனது இடை நீக்கத்தை ரத்து செய்யும்படியும், பொதுக்குழுவில் கலந்து கொண்டு என் நிலையை விளக்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவேன்" என அறிக்கையில் சரத்குமார் தெரிவித்துள்ளார்.