1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (07:50 IST)

ஏமி ஜாக்சனோடு அருண் விஜய் நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

பல வருடங்களாக போராடி வந்த அருண் விஜய்க்கு தடையற தாக்க மற்றும் தடம் போன்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்து இப்போது முன்னணி நடிகராகியுள்ளார்.இதையடுத்து அவர் இப்போது இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் ஒரு புதுப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இங்கிலாந்தில் நடந்த நிலையில் சமீபத்தில் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டது. அருண் விஜய், ஏமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் நடிக்கும் இந்த படத்துக்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வரும் நிலையில், படப்பிடிப்பின் போது அருண் விஜய் முழங்கையில் காயமடைந்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்து வந்த நிலையில் இப்போது மொத்த ஷூட்டிங்கும் முடிந்துள்ளதாக படக்குழு சார்பாக அருண் விஜய் அறிவித்துள்ளார்.  மேலும் இந்த படத்தில் பணியாற்றியது ஒரு மறக்க முடியாத அனுபவம் என்றும், படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.