உலக அளவில் ட்ரெண்டாகும் அர்ஜுனின் #BottleCapChallenge வீடியோ!

Last Updated: வியாழன், 4 ஜூலை 2019 (15:41 IST)
ப்ளூ வேல் சேலஞ், ஐஸ் பக்கட் சேலஞ், கிக்கி சேலஞ் என அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பிரபலமாகி வந்ததை அடுத்து தற்போது  "பாட்டில் கேப் சேலஞ்" இணையத்தில் உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. 


 
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான கேம் வந்து இனைஞர்கள் பட்டாளத்தை அதற்குள் மூழ்கடித்துவிடும். அந்தவையில் சமீபநாட்களுக்கு முன்னர் பல ஆபத்தான கேம் சேலஞ்களுக்கு இளைஞர்கள் தங்கள் உயிரை துட்க்ஷமென கருதி விளையாடினர். இதற்கு பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் அந்த விளையாட்டுகளுக்கு தடை விதித்தனர். 
 
இந்நிலையில் தற்போது புது விதமான உயிருக்கு ஆபத்து விளைவிக்காத விதத்தில் "பாட்டில் கேப் சேலஞ்" என்ற கேம் தற்போது இணையத்தில் மெகா ட்ரெண்டாகி வருகிறது. பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஆரம்பித்து வைத்த இந்த கேம் சேலஞ்சை தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் மற்றும் தமிழ் நடிகர் அர்ஜுன் உள்ளிட்டோர் இந்த சேலஞ்சை செய்து காட்டி அதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். 
 
தற்போது நடிகர் அர்ஜுனின் "பாட்டில் கேப் சேலஞ்"  வீடியோ இணையத்தில் மெகா வைரலாகி வருகிறது.இதில் மேலும் படிக்கவும் :