வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 20 ஜனவரி 2018 (14:25 IST)

ஜல்லிக்கட்டில் அண்ணனை இழந்து தவித்த 10வயது சிறுமியை தத்தெடுத்த இளம்நடிகர்

பலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளிமுத்துவின் தங்கையை இளம்நடிகர் அபி சரவணன் தத்தெடுத்துள்ளார்.

 
பாலமேடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் வேடிக்கை பார்க்க சென்ற காளிமுத்து(19) காளை முட்டியதில் மரணம் அடைந்தார். ஜல்லிக்கட்டு பேரவை விழா கமிட்டி காளிமுத்துவின் இறுதிச் சடங்கிற்கு எந்தவித ஆதரவும் கொடுக்கவில்லை.
 
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு சென்ற இளம்நடிகர் அபி சரவணன் காளிமுத்து உயிரிழந்த செய்தியை கேட்டு உடனடியாக சென்று அவரது இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டார். மறைந்த காளிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பினார்.
 
இதையடுத்து காளிமுத்துவின் 10வயது தங்கைக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்திலிருந்து படிப்புச் செலவு ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். அபி சரவணன் குட்டிப்புலி, பட்டதாரி, சாகசம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது நான்கு புதிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
 
டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அபி சரவணன் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.