வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (13:27 IST)

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் அங்கீகாரம் ரத்து!

Wrestling Federation of india
இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் சிலர் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை கூறினர்.

இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விரைவில்  இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்ற அனுராக் ராகூர் தெரிவித்தார்.

அதன்படி, ஜூலை 4 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என  இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. பின்னர் பல தாமதங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவிருன்டஹ் மல்யுத்த கூட்டமைப்புத் தேர்தலுக்கு பஞ்சாப், ஹரியானா உயர் நீதிமன்றம் தடைவிதித்தது.

இந்த  நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்குத் தேர்தல் நடத்தப்படாததன் காரணமாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால், இந்தியா சார்பில் விளையாடும் மல்யுத்த வீரர்கள் குறிப்பிட்ட நாடு என்பதை உரிமை கொண்டாட முடியாத நிலை உருவாகும் என கூறப்படுகிறது.

கடந்த 30 ஆம் தேதியே, இன்னும் 45 நாட்களுக்குள்  இந்திய மல்யுத்த கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தப்படவில்லை என்றால் உறுப்பினர் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என உலக மல்யுத்த கூட்டமைப்பு கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.