1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2016 (17:54 IST)

என்னுடைய முன்னாள் காதல் பற்றி நான் மறைக்கவில்லை: சமந்தா!!

என்னுடைய முன்னாள் காதல் பற்றி நான் மறைக்கவில்லை: சமந்தா!!

பிரபல நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ளார். நடிகை சமந்தாவும், நடிகர் நாக சைத்தன்யாவும் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இவர்கள் இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கவிருக்கிறது.


 
 
இந்நிலையில் "என்னுடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் என் காதலருக்கு தெரியும். அவரும் என்னை புரிந்து கொண்டுள்ளார். நான் அவரிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.
 
என் முந்தைய காதல் குறித்து அவரிடம் கூறினேன். அவரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர் வாழ்க்கையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தாலும், அதையெல்லாம் நான் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டேன். நான் வெளிப்படையாக பேசுவதால் என் திருமண வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்கிறார்.