திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (02:45 IST)

8 ஆண்டுகளுக்கு பின் அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யாராயை இணணத்து வைத்த போலீஸ்

பிரபல பாலிவுட் நட்சத்திர ஜோடி அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடி கடைசியாக கடந்த 2010ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய 'ராவண்' என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்தனர்.

இந்த நிலையில் மீண்டும் இருவரையும் ஒரே படத்தில் இணைக்க பாலிவுட் இயக்குனர் ஒருவர் திட்டமிட்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் வாழ்ந்த ஒரு காவல்துறை தம்பதி குறித்த கதை ஒன்றில் அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகிய இருவருமே போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் மிக விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தை சைலேஷ் ஆர்.சிங் என்பவர் இயக்கவுள்ளார். இந்த உண்மைக்கதைக்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகவும், இந்த படத்தில் உண்மையான தம்பதிகளான அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் நடித்தால் மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.