செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:39 IST)

தனுஷின் அந்த படம் மிகவும் பிற்போக்குத்தனமானது – விமர்சனம் வைத்த நடிகர்!

நடிகர் அபய் தியோல் தனுஷ் நடிப்பில் வெளியான ராஞ்சனா படம் மீது விமர்சனங்களை வைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் பாலிவுட்டில் அறிமுகமான முதல் படம் ராஞ்சனா. அதை ஆனந்த் எல் ராய் இயக்கி இருந்தார். அந்த படம் மிகபெரிய வெற்றி பெற்று தனுஷை பாலிவுட்டிலும் சிறந்த நடிகராக அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் படம் வெளிவந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் அந்த படத்தின் கதை மிகவும் பிற்போக்குத்தனமானது என சக பாலிவுட் நடிகரான அபய் தியோல் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி விமர்சகர் ஒருவரின் பதிவை பகிர்ந்த அவர் ‘ஒருவரை காதலிக்கும் வரை துரத்துவதும், அந்த நபர் திரும்ப உங்களை காதலிப்பதும் சினிமாவில் மட்டுமே நடக்கும். ஆனால் நிஜ வாழ்வில் அது பாலியல் துன்புறுத்தலில்தான் முடியும் . இந்த விமர்சகர் சொல்லியிருக்கும் கருத்துகளை தயவு செய்து படியுங்கள்’ எனக் கூறியுள்ளார்.